www.amhkalmunai.lk

excellence in helath care

HEART ATTACK + CHOLESTEROL / மாரடைப்பு, 


உயர் குருதியமுக்கம், மாரடைப்பு, பாரிசவாதம் என்பன அதிகளவிலான மரணங்களை ஏற்படுத்துகின்ற காரணிகளாக இருக்கின்றன.

இருதயம் எமது உடலிற்குத் தேவையான குருதியை உடல் முழுக்கச் செலுத்துகின்றது. இருதயம் தனக்குத்தேவையான பிராணவாயுவையும், சக்தியையும் இரத்தக் குழாய்களின் மூலம் பெறுகிறது.

இவ் இரத்தக் குழாய்களில் படிப்படியாக கொழுப்பு சிறுவயதிலேயே படிய ஆரம்பித்துவிடும். இவ்வாறு கொழுப்பு படிவதால் இரத்தோட்டம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தடைப்படும். இதனால் இருதயம் வேகமாக வேலைசெய்ய வேண்டி இருக்கும் போது அதற்கு மேலதிகமாக தேவைப்படும் பிராண வாயுவும், சக்தியும் கிடையாததால் மார்பு வலி ஏற்படும்.

(படத்தில் இதயவறைச் சுவர், கொழுப்பு படிந்த குழாய்களில் குருதி கட்டிபடுவதால் அக்குருதிக்குளாய் மூலம் பிராண வாயுவையும், சக்தியையும் பெறும் பகுதி முதிலில் பாதிக்கப்படுவதையும் ( Ischemia) பின்னர் அது சேதமாவதையும் (Injury) இறுதியாக இறந்து விடுவதையும் (Infarction) காண்கிறீர்கள்)

கொழுப்பு படிந்த குழாய்களில் குருதி கட்டிபடுவதால் அக்குருதிக்குளாய் மூலம் பிராண வாயுவையும், சக்தியையும் பெறும் பகுதி இறக்கும். இதுவே மாரடைப்பு எனப்படும்.


முழுமையாக அடைப்பு ஏற்படின் திடீர் மரணம் ஏற்படலாம். இதே போல் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பாரிசவாதம் ஏற்படும்.

எமது அனைவரின் குருதியிலும் கொழுப்புகள் காணப்படுகின்றது. இவை குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக ஒரு சிலரின் குருதியில் காணப்படும். இது HYPER LIPIDAEMIA என அழைக்கப்படும்.

இதனைத் தவிர்க்க உங்கள் குருதியிலுள்ள கொழுப்பின் அளவை வருடத்திற்கு ஒரு தடவையேனும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

குருதியில் கொழுப்பு அதிகஅளவில் காணப்படின் உணவில் கீழ் கூறப்படும் மாற்றங்களை ஏற்படுத்துவதாலும், தேக அப்பியாசத்தின் மூலமும் குருதியிலுள்ள கொழுப்பைக் குறைக்கலாம். இரண்டிற்கும் குருதியிலுள்ள கொழுப்பு குறையாவிடின் வில்லைகளைத் தொடர்ந்து பாவித்து இதனைக் குறைக்க வேண்டும்.

நீங்கள் அதிகஅளவு கொழுப்பு எண்ணையை உணவில் சேர்த்தால் அது உங்கள் இரத்தக்குளாய்களில் படிந்து இருதயத்துக்கு இரத்தம் செல்வதைத் தடுக்கும்.

இதனைத் தவிர்க்க

மிகக் குறைந்த அளவு மிருகக் கொழுப்பை உண்ணவும்/ தவிர்க்கவும்.

பொரித்த உணவுகளை உண்பதைக் குறைக்கவும்.

நெய், தேங்காய்ப்பால், CHEESE, BUTTER, MARGARINE, சிவப்பு இறைச்சி, ஊறுகாய், அச்சாறு, முட்டை மஞ்சள் கரு, ஈரல், மூளை ஆகியவற்றை உண்ணபதைக் குறைக்க வேண்டும்.

ஆடைநீக்கிய பால்மா (NON FAT) பாவியுங்கள்.

மீன் தேவையான அளவு உண்ணலாம்.

கூடியளவில் நார்த்தன்மையான உணவை உண்ணுங்கள்.

உதாரணம் பழங்கள், இலைக்கறிவகைகள், அவரையினம், கோவா, தானியங்கள்.

அபாய அறிகுறிகள் -டெங்குக் காய்ச்சல்/DENGUE FEVER


டெங்குக் காய்ச்சல் நுளம்பினால் பரப்பப்படும் ஒரு நோய். இந்நோய்பற்றிய சில தகவல்கள்.

டெங்கு நோயின் பாதிப்புக்கள்


டெங்கு நோயின் சாதாரண அடையாளங்கள்


@ கடும் காய்ச்சல்

@ தலைவலி

@ வாந்தி

@ உடல்வலி

@ வயிற்றுளைச்சல்

சாதாரணமாக 3 அல்லது 4 தினங்களின் பின் நோய்குணமாகிவிடும். எனினும் சிலருக்கு டெங்குக் குருதிப்பெருக்கு நோய் ஏற்படக்கூடும்.

டெங்குக் குருதிப்பெருக்கு நோயின் அறிகுறிகள்

@ தோலின் அடியில் சிறிய சிகப்பு அடையாளம் தோன்றுதல்

@ கண்கள் சிகப்பு நிறமாதல்

@ முரசினால்,மூக்கினால் இரத்தம் கசிதல்

@ மல, சலத்துடன் இரத்தம் வெளியேறுதல்

@ கடுமையான வயிற்று நோ

@ வாந்தி , மலம் கறுப்பு நிறமாதல்

இவை அபாய அறிகுறிகளாகும். இதனுடன் டெங்கு அதிர்ச்சி நிலையைக்குறிக்கும்

@ உடல் வெளிறல்

@ உடம்பு குளிர்ந்து போதல்

@ கலக்கமான, தூக்கமான நிலை

@ மூச்சுத்திணறல்

இவ்வாறான நோய் அடையாளங்கள் உள்ள நோயாளிகளுக்கு உடனடியாக வைத்தியசாலைச் சிகிச்சை அவசியமானதாகும்.

நாம் என்ன செய்ய வேண்டும்

@நோய் பரப்பும் நூளம்புகளைக் கட்டுப்படுத்தல்

@நோயாளிக்கு போதிய ஓய்வு கொடுத்தல் - விசேடமாக பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பாமல் ஓய்வெடுக்கச் செய்தல்

@அதிகளவில் நீராகாரம் அருந்துதல்

கொதித்தாறிய நீர்

சோற்றுக்கஞ்சி

சூப்

பழரசம்..

@சிகப்பு, கறுப்பு நிற ஆகாரங்களைத் தவிர்த்தல்

@'அஸ்பரின்' வகை மருந்துகளைத் தவிர்த்தல்

@பரசிற்றமோல் சரியான அளவில் கொடுத்தல்

டெங்குக் காய்ச்சல் பற்றி சந்தேகம் ஏற்பட்டால் உடனே வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுதல்.

அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால்...அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல். இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.

கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது. அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள்.

கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.

கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும்.

பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள்.

கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம். கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான்.

கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.

அதிக நேரம் கணினி பார்த்தால் கண் கெடும்.


காச நோய்


காசநோயானது "மைக்கோபற்றீரியம் ரியுபகுளோசிஸ்" (microbactriam tuberculosis) என அழைக்கப்படும் பக்ரீரியாவால் ஏற்படும் தொற்றாகும். இது பொதுவாக (80%) சுவாசப்பைகளையே பாதிக்கும். ஆனால் உடலில் எப்பகுதியும் பாதிக்கப்படலாம். உலக சனத்தொகையில் 1/3 பகுதியினர் காசநோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதுவே மிகக்கூடுதலானோரை பலி கொள்ளும் தொற்று நோயாகும். ஆனாலும் இது உரிய சிகிச்சையின் மூலம் முற்றாகக் குணப்படுத்தப்படலாம்.


காசநோய்த் தொற்று எவ்வாறு ஏற்படுகிறது?

சுவாசப்பையில் உயிர்ப்பான காசநோய் (active TB) காணப்படுவோரின் இருமலுடன் அல்லது தும்மலுடன் காசநோய் பக்ரீரியாவானது வளிமண்டலத்தினுள் வெளியிடப்படுகிறது. இந்த பக்ரீரியாவானது சிறு நீர்த்துளிகள் மூலம் வளியினுள் கடத்தப்படுகிறது. நீங்கள் இந்த பக்ரீரியாவை சுவாசித்தால் அது உங்கள் சுவாசப்பையினுள் பெருகுகின்றது. இந்தத் தொற்றானது பின்னர் 3 வழிகளில் செல்கிறது.

1. அறிகுறிகளற்ற சிறியளவிலான தொற்று

அனேகமானோரில் இவ்வகையான தொற்றே காணப்படுகிறது. காசநோய் பக்ரீரியாவை சுவாசிக்கும் எல்லோருமே உயிர்ப்பான காச நோய்க்குள்ளாவதில்லை. இவ்வாறு உள்ளெடுக்கப்பட்ட பக்ரீரியாவானது சுவாசப்பையினுள் பெருகுகின்றது. இதனால் நிர்ப்பீடனத் தொகுதியில் செயற்பாடு ஆரம்பிக்கப்படுகிறது. காசநோய் பக்ரீரியாவானது நீர்ப்பீடனத் தொகுதியால் (வெண்குருதிச் சிறுதுணிக்கை போன்றவை) அழிக்கப்படுகிறது அல்லது ... சிறிது காலத்திற்கு மெல்லிய அறிகுறிகள் காணப்படலாம் அல்லது அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். அத்துடன் தொற்றானது சிறிது காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இவர்கள் மூலம் நோய் தொற்றாது.

இவ்வகையான சிறிதளவு தொற்று இருப்பது உங்களுக்குத் தெரியாது சுவாசப்பை எக்ஸ் - கதிர்ப்படத்தில் ஒரு சிறிய தழும்பு தென்படலாம். காசநோய் பக்ரீரியாவிற்கும் நீர்ப்பீடகத் தொகுதியனருக்குமிடையே ஒரு போர் நடைபெற்றதை இது காட்டுகிறது.

இவ்வகையான தொற்றே மிகக் கூடுதலாக ஏற்படுகிறது. எனவே, தொற்று ஏற்படுவோரில் அனேகமானோர் அறிகுறி தோற்றுவிப்பதில்லை, தொற்றானது உங்களது நிர்ப்பீடனத் தொகுதியால் நிறுத்தப்படுகிறது.

2. உயிர்ப்பான காசநோய்க்கான தொற்று

சிலருக்கு இது ஏற்படுகிறது. காசநோய் பக்ரீரியாவை உள்ளெடுக்கும் சிலரிலே அறிகுறிகளுடன் கூடிய உயிர்ப்பான காசநோய் ஏற்படுகிறது. இவர்களில் நிர்ப்பீடனத் தொகுதியானது போரை வென்று எவ்வாறு பரவும் பக்ரீரியாவைத் தடுக்க முடியாது போகிறது. பக்ரீரியாவானது பெருகி சுவாசப்பை மற்றும் இதர உடலுறுப்புகளுக்குப் பரவுகிறது. உயிர்ப்பான காசநோய் அறிகுறியானது பக்ரீரியாவைச் சுவாசித்து 6 - 8 வாரங்களில் ஏற்படுகிறது.

3. மீள் - உயிர்ப்பாக்கப்பட்ட (இரண்டாந்தர - secondary) தொற்று – உயிர்ப்பான காசநோயை தோற்றுவிக்கும்.

சிலரில் சிறிய தொற்று தடுத்து நிறுத்தப்பட்டு சில மாதங்கள் அல்லது வருடங்களின் பின் உயிர்ப்பான காசநோய் ஏற்படுகிறது. நிர்பீடனத் தொகுதியானது முதலில் பக்ரீரியா பெருகுவதை நிறுத்துகிறது. ஆனாலும் எல்லா பக்ரீரியாவும் கொல்லப்படுவதில்லை. சில பக்ரீரியாவானது தழும்பிலுள்ள இழையத்தினுள் தப்பித்து வாழ்கிறது. அவை பெருக்கப்படாது நிர்ப்பீடனத் தொகுதியால் தடுக்கப்படுகிறது. அவை எவ்வித தீங்கும் ஏற்படுத்தாது பல வருடங்களுக்கு உயிர்ப்பற்ற நிலையில் காணப்படும். உடலில் நிர்ப்பீடனத் தொகுதி ஏதோ ஒரு காரணத்தால் பலவீனமடையும் போது இந்த உயிர்ப்பற்ற பக்ரீரியா பெருக்கமடைந்து உயிர்ப்பான காசநோயைத் தோற்றுவிக்கிறது. பின்வரும் சந்தர்ப்பங்களில் பலவீனமடைந்த நிர்ப்பீடனத் தொகுதியோ அல்லது உயிர்ப்பான காசநோய் காணப்படலாம்.

வயதானோர் அல்லது வலுவிழந்தோர்

போசாக்கின்மை

நீரிழிவு உள்ளோர்

நிர்ப்பீடனத்தை குறைக்கும் மருந்துகள் அல்லது (steroid) பாவிப்போர்

சிறுநீரகம் செயலிழந்தோர்

மதுபானத்திற்கு அடிமையானோர் (alcoholic)

எயிட்ஸ் நோய் உள்ளோர்


நோய் அறிகுறிகள்

மூன்று வாரங்களிற்கு மேற்பட்ட இருமல்

நிறைக்குறைவு

களைப்பு

காய்ச்சல் - முக்கியமாக நேரங்களிலேயே உடல் வெப்பநிலை கூடும்.

இரவில் அதிக வியர்வை

நெஞ்சு வலி

மூச்செடுப்பதில் சிரமம்

பசியின்மை

இரத்தக் கரையுடன் கூடிய சளி வெளியேற்றம் (இருமும் போது)


காசநோய்க்கான ஆபத்துக் காரணிகள் (risk factors)

பலவீனமான நிர்ப்பீடனத் தொகுதியுள்ளோர் காசநோய்க்கு இலகுவாக அமையாவர். நீரிழிவு, புற்றுநோய்க்காள கடுமையான சிகிச்சையிலுள்ளோர், ஆஸ்த்துமா, நீண்ட கால சுவாசப்பை நோய்கள், புகை பிடித்தல், பாதிக்கப்பட்ட சுவாசப்பை உள்ளோர், அதிகளவு மதுபானம் அருந்துவோர். சிறுநீரகக் கோளாறுகள் போன்றவை நிர்ப்பீடனத் தொகுதியைப் பலவீனமடையச் செய்து காசநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.


சிக்கலான விளைவுகள்

சிகிச்சை - காசநோய் பக்ரீரியா சுவாசப்பையை அழிக்கிறது. அதனால் காசநோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடிப்பது அவசியமாகும். இதன் மூலம் நோய் பரவுவதை மட்டுப் படுத்துவதோடு சுவாசப்பைகள் அதிகமாக பாதிப்படைவது தடுக்கப்படுகிறது. காசநோய் பக்ரீரியா மூளை, முண்ணான், சிறுநீரகம், குடல், மற்றும் பலோப்பியன் குழாய்கள் உட்பட உடலின் பல பாகங்களையும் பாதிக்கிறது.

சிகிச்சை

நேரடியாக அவதானிக்ப்படும் சிகிச்சை (DOT). ஒவ்வொருநாளும் சரியாக மருந்துகளைப் பாவிப்பது அவசியமாகும். நோயிலிருந்து முற்றாக விடுபட சிபார்சு செய்யப்பட்ட காலத்திற்கு தவறாது ஒவ்வொரு நாளும் மருந்துகளை உட்கொண்டாலே நோயிலிருந்து குணமாக முடியும். இதற்குரிய சிறந்த வழி சுகாதார உத்தியோகத்தர் ஒருவரின் மேற்பார்வையின் கீழ் மருந்துகளை உள்ளெடுத்தலாகும். இதன் மூலம் குறிக்கப்பட்ட காலத்திற்கு சரியாக (தவறாது) ஒவ்வொருநாளும்" மருந்துகளை உள்ளெடுப்பது உறுதி செய்யப்படுகிறது. இது "நேரடி அவதானிப்பின் கீழான சிகிச்சை" என அழைக்கப் படுவதோடு சுருக்கமாக "DOTS" என அழைக்கப்படுகிறது. இம்முறையானது காசநோயாளி ஒருவர் சரியான காசநோய் மருந்துகளை சரியான அளவுகளில், சரியான கால இடைவெளிகளில் பூரண சிகிச்சையை பெறுவதை உறுதி செய்கிறது. DOT ற்கு நோயாளி வைத்தியசாலையில் இருக்க வேண்டியதில்லை. நோயாளி தனக்கு வசதியான ஒரு DOT நிலையத்தைத் தேர்ந்தெடுக்க முடியும். தெரிவு செய்யப்பட்ட DOT நிலையத்திற்;கு அரசாங்கம் மருந்துகளை விநியோகஞ் செய்யும்.

சிகிச்சைக் காலமானது பாதிக்கப்பட்ட உடலின் பாகத்தில் தங்கியிருக்கும். சுவாசப்பையாயின் பொதுவாக சிகிச்சை ஆறுமாதம் எடுக்கும். வேறு உடற்பாகமாயின் உங்கள் வைத்தியர் சிகிச்சைக்கான காலத்தைத் தீர்மானிப்பார்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காசநோயாளியொருவர் பல்வேறு மாத்திரைகள் அடங்கிய சிகிச்சையை ஆறு மாதத்திற்கு தொடர வேண்டும். இந்த மாத்திரைகள் பக்ரீரியாவின் பல்வேறு நிலைகளையும் அழிக்கிறது. பூரண குணமாக நாம் முழுதான சிகிச்சையை எடுக்க வேண்டும்.

காசநோய் சிகிச்சையானது இரு நிலைகளை கொண்டது. ஆரம்ப தீவிர சிகிச்சை அதைத் தொடர்ந்து தொடர்சிகிச்சை. ஆரம்ப தீவிர சிகிச்சையில் காசநோய் பக்ரீரியாவானது வேகமாக அழிக்கப்படுகிறது. நோயாளி உடனடியாக இரு வாரங்களின் நோயைப் பரப்பாத நிலைக்கு வருவதோடு அறிகுறிகளும் குறைகிறது தொடர் சிகிச்சையில் குறைந்த வகையான மருந்துகள் நீண்ட காலத்திற்கு வழங்கப்படுகிறது. மருந்துகளின் தொற்றழிக்கும் தன்மையானது எஞ்சியுள்ள பக்ரீரியாவை இல்லாதொழிப்பதோடு மீண்டும் நோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.


சிகிச்சையின் போது...

பின்வரும் அறிகுறிகளுள் ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக வைத்தியருக்கு அறிவிக்கவும்.

வாந்தி / குமட்டல்

கண்கள் / தோல் மஞ்சளாதல்

உடலில் கடி / சொறிவு

பார்வையில் கோளாறு

காசநோய் சிகிச்சைக்குட்படுபவர்கள் குருதி மீன்களான ..... கெலவல்லா போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றால சிசிச்சையில் இடைத்தாக்கம் ஏற்படலாம்.

சிகிச்சை பயனளிப்பதை உறுதிப்படுத்த சளியை பரிசோதித்துப் பார்க்கலாம்.

"சரியாக, தவறாது ஒவ்வொருநாளும்" மருந்துகளை எடுக்காது விட்டால் என்ன நிகழும்?

நோய் குணமாகாது.

நோயை மற்றையோருக்கு பரப்புவராக செயற்படுவார்.

நோயை குணப்படுத்துவது கடினமாகும். அதிக மாத்திரைகளை நீண்ட காலம் பயன்படுத்த வேண்டி ஏற்படலாம்.


தடுப்பு முறை

சிறந்த காற்றோட்டமும், சூரிய ஒளியும் பக்ரீரியாவை அழிக்க உதவும்.

மாத்திரைகளை "சரியாக, தவறாது தினமும்" உரிய காலத்திற்கு எடுக்க வேண்டும்.

வெளிவரும் சளியை ஒரு கலனுள் சேகரித்து எரிக்க / புதைக்க வேண்டும்.

தும்மும் போது / இருமும் போது மூக்கையும் வாயையும் ஏதாவதொன்றால் மூடிக்கொள்ள வேண்டும்.


தொற்று மற்றும் ஒட்டுண்ணி நோய்கள்

குடல்சார் தொற்று நோய்கள்

காச நோய்

விலங்கால் பரப்பப்படும் சில பக்டீரீயா நோய்கள்

ஏனைய பக்டீரீயா நோய்கள்

பொதுவாக பாலியல் மூலம் பரவும் தொற்றுக்கள்

மற்றைய ஸ்பைரோகிற் தொற்றுகள்

கிளமிடவால் ஏற்படுத்தும் ஏனைய நோய்கள்

றிக்கற்சியோசிஸ்

மைல் நரம்புத் தொகுதியில் ஏற்படும் வைரஸ் தொற்றுக்கள்

ஆத்திரப் போடோ மூலம் பரவும் வைரஸ் காய்ச்சல் மற்றும் வைரஸ் குருதிப்பெருக்கு காய்ச்சல்கள்

தோல் மற்றும் மேலணிகளைத் தாக்கும் வைரஸ் தொற்றுக்கள்

வைரஸ் ஈரலழற்சி

மனித நீர்ப்பீடனக் குறைபாட்டு வைரஸ் நோய்கள்

ஏனைய நோய்கள்

பங்கஸ் நோய்

புறோட்டசோவா நோய்கள்

குடற்புழு நோய்

தலைப் பேன், நாடாப்புழு, மற்றும்குடல் தொற்றுகள்

பக்ரீரியா தொற்று நோய் மற்றும் ஒட்டுண்ணி நோய்களின் விலைவு

பக்ரீரியா வைரஸ் மற்றும்தொற்றுக்கான காறணிகள்

மற்றைய தொற்று நோய்கள்